மாவீரன் படத்தின் முதல் நாள் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படம் நேற்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியானது.
இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக வெளியாகியுள்ளது. தெலுங்கில் இந்தப் படத்துக்கு 'மாவீருடு' என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவீரன் படத்தின் முதல் நாள் வசூல் விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன் படி படம், முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் ரூ 9 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு வெளியான படங்களின் முதல் நாள் வசூலில் மாவீரன் படம் முதல் 5 இடங்களுக்குள் வந்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியில் உள்ளனர்.
