ரூ 7.27 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி இல்லை - நிர்மலா சீதாராமன்

 

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை பண்மை பாராட்டிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடுத்தர வர்க்க மக்களுக்கு அரசாங்கம் பல வரி சலுகைகளை வழங்கியுள்ளது என்று கூறினார்.
புதிய வரி விதிப்பின் கீழ் ஆண்டுக்கு ₹7.27 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு அரசு வருமான வரி விலக்கு அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ₹7 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க அரசு முடிவு செய்த நிலையில், பல தரப்பிலிருந்து எழுந்த சந்தேகங்களையும் நிர்மலா சீதாராமன் விளக்கினார். "நாங்கள் ஒரு குழுவாக அமர்ந்து, நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு 1 ரூபாய்க்கும் எந்த கட்டத்தில் வரி செலுத்துகிறீர்கள் என்பதை கண்டுபிடிக்க விவரங்களை திரட்டினோம்... உதாரணமாக ₹7.27 லட்சத்திற்கு, நீங்கள் எந்த வரியும் செலுத்த மாட்டீர்கள். இப்போது. ₹27,000 தான் பிரேக்-ஈவன் வருகிறது. அதன் பிறகு நீங்கள் வரி செலுத்தத் தொடங்குவீர்கள்" என்று நிதியமைச்சர் கூறினார்.

"உங்களிடம் ₹50,000 நிலையான விலக்கு உள்ளது. புதிய திட்டத்தின் கீழ், நிலையான விலக்கு இல்லை என்பதே குறை. அது இப்போது கொடுக்கப்பட்டுள்ளது. பணம் செலுத்தும் விகிதத்திலும் இணக்கப் பக்கத்திலும் எளிமையைக் கொண்டு வந்துள்ளோம்" என்று நிர்மலா சீதாராமன் மேலும் கூறினார்.

MSME பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்

மத்திய அரசின் சாதனைகளை ஆராயும் போது, 2013-14 நிதியாண்டில் ₹3,185 கோடியுடன் ஒப்பிடும்போது, 2023-24 ஆம் ஆண்டிற்கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் பட்ஜெட் ₹22,138 கோடியாக உயர்ந்துள்ளது எனக் குறிப்பிட்டார் நிர்மலா சீதாராமன்.

'குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான பொது கொள்முதல் கொள்கை' முயற்சியின் விளைவாக, 158 மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த கொள்முதல், 33 சதவீதம் MSME-களில் இருந்து வருகிறது. இந்த சாதனையானது இன்றுவரை அதிக விகிதத்தை பிரதிபலிக்கிறது என்றார் அவர்.

நாங்கள் TReDS தளத்தை (Trade Receivables Discounting System)தொடங்கினோம், இதனால் MSME-கள் மற்றும் பிற நிறுவனங்கள் தங்கள் வாங்குபவர் (Buyer) பணம் செலுத்தாததால் எந்த பணப்புழக்க நெருக்கடியையும் சந்திக்க வேண்டியதில்லை, என்றும் குறிப்பிட்டார் நிர்மலா.

ONDC (டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த நெட்வொர்க்) MSME துறையை ஒரு பெரிய நுகர்வோர் தளத்தின் பலன்களை அறுவடை செய்ய அனுமதித்துள்ளது. 2014-ல் 142-ல் இருந்து 2019-ல் 63-வது இடத்திற்கு, தொழில் செய்ய எளிதான குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை மேம்படுத்தப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார்.
Share:

Popular Posts

Copyright © Factofbitcointhis website user only allowed by 18+