சான்பிரான்சிஸ்கோ: சமூக வலைதளமான டிவிட்டர் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக நிறுவனர் எலக் மஸ்க் தெரிவித்துள்ளார்.
டிவிட்டரில் பதிவிடும் கணக்குகள், டிவிட்டர் பக்கத்தை பயன்படுத்துவோர் ஒருநாளைக்கு எத்தனை பதிவுகளை படிக்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வௌியிட்டு வந்தார்.
எலன் மஸ்க்கின் அதிரடி உத்தரவுகளால் எரிச்சலடைந்த ட்விட்டர் பயனர்கள் அதனை விட்டு வௌியேறி வந்தனர். ட்விட்டரின் பங்குச்சந்தை மதிப்பும் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வந்தது. விளம்பரதாரர்களும் டிவிட்டரை விட்டு வௌியேறியதால் நஷ்டத்தை சந்தித்து வந்தது. இதுகுறித்து எலன் மஸ்க் கடந்த ஏப்ரல் மாதம், "வௌியேறிய விளம்பரதாரர்கள் மீண்டும் வருவார்கள். ட்விட்டர் மீண்டும் லாபத்தை நோக்கி செல்லும்" என்று தெரிவித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக கடந்த மே மாதம் விளம்பரத்துறையில் அனுபவம் மிக்க லிண்டா யாக்கரினோ என்பவரை ட்விட்டர் தலைமை செயல் அதிகாரியாக நியமித்தார். இந்நிலையில் ட்விட்டர் நிறுவனம் தற்போதும் நஷ்டத்தில் தள்ளாடுகிறது என எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். டிவிட்டரின் வணிகம் தொடர்பாக ஆலோசனை தருவதாக டிவிட்டரில் பதிவிட்ட ஒருவருக்கு எலன் மஸ்க் அளித்துள்ள பதிலில், "டிவிட்டரின் விளம்பரங்கள் 50 சதவீதம் குறைந்து விட்டதால் இன்னும் நஷ்டத்தில் தான் இயங்குகிறது. இதனால் கடன் சுமையும் அதிகரித்து விட்டது. வணிகம் குறித்த பிற விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு முன் டிவிட்டரை லாபத்தை நோக்கி கொண்டு செல்வதில் நான் கவனம் செலுத்த உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
