நோ டென்ஷன்..இனிமேல் உங்க நம்பர் யாருக்கும் காட்டாது..! வாட்ஸ்அப்பின் லேட்டஸ்ட் அப்டேட்..!

 

மெட்டாவின் வாட்ஸ்அப் 'போன் நம்பர் பிரைவசி' என்ற புதிய பாதுகாப்பு அம்சத்தை வெளியிடவுள்ளது.

உலகில் உள்ள மக்கள் அனைவரும் வாட்ஸ்அப் செயலி மற்றும் இணையதளத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் செய்திகளை பரிமாறிக்கொள்வது மட்டுமல்லாமல் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதோடு பண பரிமாற்றத்தையும் மேற்கொள்கின்றனர்.

வாட்ஸ்அப், பயனர்களின் தேவைக்கேற்ப அவ்வப்போது புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில், தற்பொழுது பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் புதியதோர் அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. அந்த அம்சம் என்னவென்றால் போன் நம்பர் பிரைவசி (Phone Number Privacy) ஆகும்.

இந்த அம்சமானது வாட்ஸ் அப் குழுக்களில் புதிதாக இணையும் பயனர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். வாட்ஸ்அப் குரூப்பில் இருக்கும் பயனர்களின் மொபைல் நம்பர்களை இந்த அம்சம் மூலம் மறைக்கலாம். இதை பயன்படுத்தும்போது உங்களது மொபைல் எண்ணானது குரூப் அட்மின் மற்றும் உங்கள் மொபைலில் இருக்கும் நண்பர்களுக்கு மட்டுமே காட்டும்.

இந்த அம்சம் தற்பொழுது, பீட்டா பயனர்களுக்காக ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்-ல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது வரும் நாட்களில் மற்ற பயனர்களும் பயனடையும் வகையில் வெளியாகவுள்ளது என்று அறிக்கை கூறுகிறது. மேலும், வாட்ஸ்அப்பில் பயனர்பெயரை (User Name) அமைப்பதற்கான அம்சத்தையும் வெளியிடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Popular Posts

Copyright © Factofbitcointhis website user only allowed by 18+