அதிக வாடிக்கையாளர்கள்: இந்தியாவில் ஜியோ முதலிடம்; தமிழகத்தில்?

 

ந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட செல்போன் நிறுவனமாக ஜியோ உருவெடுத்துள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், அதிக வாடிக்கையாளர்களை கொண்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் குறித்து மக்களவை உறுப்பினரின் கேள்விக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பதிலளித்துள்ளது.
அதில், இந்தியாவில் அதிக செல்போன் வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனம் ஜியோ(43,63,09,270) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக ஏர்டெல் 37,23,15,782 வாடிக்கையாளர்கள், வோடபோன் - ஐடியா 23,09,41,435 வாடிக்கையாளர்களை, பி.எஸ்.என்.எல். 10,14,91,015 வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இதையும் படிக்க | திருச்சி அரசு மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு!

ஆனால், தமிழகத்தில் ஏர்டெல் நிறுவனம்தான் அதிக வாடிக்கையாளர்களை(2,74,98,627) கொண்டுள்ளது. முறையே ஜியோ, வோடபோன் - ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளது.
Share:

Popular Posts

Copyright © Factofbitcointhis website user only allowed by 18+