கை, கால் அடிக்கடி மரத்து போகுதா...? நீங்க சாப்பிட வேண்டிய உணவு இது தான்!

 

நமது உடலின் உறுப்புகள் சரியான முறையில் செயல்பட இரத்த ஓட்டம் மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் ரத்தம் மூலமாகவே உறுப்புகளுக்கு ஆக்சிஜன் மற்றும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது.

இதனை பயன்படுத்தி அந்தந்த உறுப்புகள் தாம் செய்ய வேண்டிய வேலைகளை சிறப்பாக செய்கின்றன. சீரான ரத்த ஓட்டம் கிடைக்காத போது இதயம், சிறுநீரகங்கள் மற்றும் நுரையீரல்கள் போன்றவை பாதிப்புக்கு உள்ளாகிறது.


ரத்த ஓட்டம் இல்லாததால் நோய்கள் ஏற்படுவதற்கான முக்கிய காரணம், உறுப்புகள் இயல்பாக செயல்படுவதற்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காததே ஆகும். ரத்த ஓட்டம் தடைப்படும் பொழுது வலி, தசை பிடிப்பு, மரத்து போதல், செரிமான கோளாறுகள், கைகள் அல்லது கால்கள் குளிர்ந்து போதல் போன்ற அறிகுறிகள் தென்படும்.


தடைபட்ட ரத்த ஓட்டத்தை சீராக மாற்றுவதற்கு ஒரு சில மருந்துகள் உதவி புரிகிறது. மேலும் இது தவிர ஒரு சில உணவுகளை பின்பற்றுவதன் மூலமாகவும் சீரான ரத்த ஓட்டத்தை நாம் பெறலாம். உங்களுக்கு அடிக்கடி கை கால்கள் மரத்து போகிறது என்றால் இந்த உணவுகளை சாப்பிடுவது உங்களுக்கு உதவ கூடும். அவ்வாறான ஒரு சில உணவுகள் குறித்து இப்பொழுது தெரிந்து கொள்வோம்:


உப்பு நீரில் வாழும் மீன்கள்: ரத்த நாளங்களில் இருக்கக்கூடிய ரத்த கட்டுகள் மற்றும் சீரான ரத்த அழுத்தத்தை பராமரிக்க ஒமேகா-3 அமிலங்கள் மிகவும் அவசியம். இதனால் இரத்த ஓட்டம் சீராகிறது. வஞ்சரம், கானாங்கெளுத்தி, சூரை, நன்னீர் மீன் போன்ற மீன்களில் அதிக அளவு ஒமேகா-3 அமிலங்கள் காணப்படுகிறது.


சிட்ரஸ் பழங்கள்: அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகளை தராமல், நம் உடலுக்கு அத்தியாவசியமான தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை வழங்குவதில் சிட்ரிக் அமிலம் சிறந்தது. அதுமட்டுமல்லாமல் இது ரத்தக் கட்டுகளை அவிழ்த்து, சீரான ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. ஆரஞ்சு, திராட்சை மற்றும் எலுமிச்சை போன்ற பழங்களில் சிட்ரிக் அமிலம் காணப்படுகிறது.


நட்ஸ் வகைகள்: நமது இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதில் நட்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றில் மெக்னீசியம், பொட்டாசியம் ஆர்கினின் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளது. ஆர்கினின் சத்தானது நைட்ரிக் அமிலத்தை உருவாக்குவதன் மூலமாக ரத்த நாளங்களை விரிவடைய செய்து, நமது ரத்த ஓட்டத்தை எவ்வித தடைவின்றி சீராக நடைபெறுவதற்கு உதவுகிறது. வால்நட், ஹேசில்நட் முந்திரி பருப்பு மற்றும் பாதாம் போன்ற நட்ஸ் வகைகளில் ஆர்கினின் உட்பட பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது.


வெங்காயம் மற்றும் பூண்டு : நமது ரத்த அழுத்தம் மற்றும் இதய ஆரோக்கியம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இவை இரண்டையும் பராமரிக்க பூண்டு உதவுகிறது. பூண்டில் காணப்படும் சல்ஃபர் நமது ரத்த அழுத்தத்தை குறைத்து, ரத்த நாளங்களை ரிலாக்ஸ் செய்வதன் மூலமாக சீரான ரத்த ஓட்டத்தை தருகிறது. மேலும் வெங்காயத்தில் காணப்படும் ஆக்சிடன்ட்கள் மற்றும் ஃப்ளவனாய்டுகள் நேரடியாக ரத்த ஓட்டத்திற்கு உதவுகின்றன.

Share:

Popular Posts

Copyright © Factofbitcointhis website user only allowed by 18+