கல்வி மூலம் வாழ்க்கையை படியுங்கள்: மாணவர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை

 

டிகர் சிவக்குமார், அவருடைய மகன்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் அகரம் அறக்கட்டளை மூலம் பல ஏழை மாணவர்களுக்கு கல்வியை கொடுத்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் லட்சியத்தில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு, சென்னை சாலிகிராமத்தில் இன்று (ஜூலை 16) அகரம் அறக்கட்டளையில் விழா நடந்தது. இதில் சிவக்குமார், சூர்யா, கார்த்தி பங்கேற்று மாணவ, மாணவிகளை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினர். மேலும், அவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பேசியதாவது: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் தலை வணங்குகிறேன்.

மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பது எவ்வளவு கஷ்டம் என்பது தெரியும். அனைவருக்கும் சரியான சமமான கல்வி வழங்க அகரம் அறக்கட்டகளை முயற்சி எடுத்து வருகிறது. இது போன்ற கல்வி உதவிதொகை பெறும் நிகழ்வால் தான் வாழ்க்கை முழுமையடைகிறது. கல்வி மூலவமாக வாழ்க்கையை படியுங்கள், வாழ்க்கை மூலமாக கல்வியை படியுங்கள்.

வாழ்க்கை முழுவதும் கல்வி தேவை; ஆனால் மார்க் மட்டும் வாழ்க்கையல்ல. சாதி மதத்தை கடந்து வாழ்க்கையை புரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.நடிகர் கார்த்தி பேசுகையில், 'நடிகர் விஜய் பயிலரங்கம் துவங்கியதில் சந்தோஷம். இது பத்தாது, ஏனென்றால் அவ்வளது தேவை இருக்கிறது. விஜய் அண்ணன் செய்வது மிகவும் சந்தோஷம்' என்றார்.
Share:

Popular Posts

Copyright © Factofbitcointhis website user only allowed by 18+